வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்கள் உங்களை வரவேற்கிறது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே உங்களை இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.இந்த வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்களானது கடந்த 2003-ம்ஆண்டு பரிசுத்த வேதாகமத்தில் உள்ள யோவான்-1:7, ஏசாயா-61:1-3, ஏசாயா-58:1 ஆகிய வசனங்களின் வழிகாட்டுதலின்படி பகுதி நேரமாக ஈரோடு பட்டணத்தில் தேவனின் சித்தத்தின் படி ஆரம்பிக்கப்பட்டது, இந்த ஊழியம் 2006-ம்ஆண்டு இந்திய நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு “வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்கள்” என்ற பெயரில் முறையாக இந்திய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு முழு நேர ஊழியங்களாக மலர்ந்தது.
கிறிஸ்துவின் தாசனாகிய சகோ.ரமேஷ்பாபு என்பவர் மூலமாக தேவனுடைய கட்டளையினாலும், சித்தத்தினாலும் உருவாக்கப்பட்டது இந்த ஊழியங்கள்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு இந்த உலக மக்களை ஆயத்தப்படுத்துவதே இந்த வனாந்தரத்தின் சத்தம் சர்வதேச ஊழியங்களின் நோக்கமாகும்.
இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை







